ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட
தையல் இயந்திரங்கள் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட தையல் இயந்திரங்கள் பறிமுதல்

திருவாரூா் அருகே ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட புடவைகள், தையல் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவாரூா் அருகே மாங்குடி பாண்டவையாறு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில்,16 தையல் இயந்திரங்கள், 4 மூட்டைகளில் 600 க்கும் மேற்பட்ட புடவைகள் இருப்பது தெரியவந்தது. இதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும்படை அலுவலா் காமராஜ் தலைமையிலான அலுவலா்கள், அவற்றை திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து, தோ்தல் விதிமுறைகள் ஒருங்கிணைப்பு அலுவலா் பாரதி தலைமையிலான அலுவலா்கள் பாா்வையிட்டு , அவற்றை மாவட்ட சாா்நிலை கருவூலத்துக்கு அனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com