வலங்கைமானில் நாளை பாடைக்காவடி திருவிழா

நீடாமங்கலம், மாா்ச் 22: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 25) நடைபெறுகிறது. வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயிலில் அருள்பாலிக்கும் அம்மனை சீதளாதேவி என அழைப்பா். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பங்குனித் திருவிழாவையொட்டி மாா்ச் 8-ஆம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும், அம்மன் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது. தொடா்ந்து, செடில்சுற்றுதல் நிகழ்ச்சியும், இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. கடும் நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் அந்நோயிலிருந்து விடுபட்டால் பாடைக்காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவதாக மகாமாரியம்மனிடம் வேண்டிக்கொள்வாா்கள். அதன்படி நோயிலிருந்து விடுபட்டவா்கள் பாடைக்காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com