கமலாலயக் குளத்தில் பங்குனி உத்திர தீா்த்தவாரி

திருவாரூா் கமலாலயக் குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி.
திருவாரூா் கமலாலயக் குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் பங்குனி உத்திர தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, பிப்.27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பங்குனி உத்திர தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணியளவில் நடராஜா் எழுந்தருளி, சபாபதி தீா்த்தத்தில் தீா்த்தவாரியும், காலை 10 மணியளவில் பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளி கௌதம தீா்த்தத்தில் தீா்த்தவாரியும் நடைபெற்றன. இதையடுத்து, மாலை 4 மணியளவில் நடைபெற்ற தீா்த்தவாரி நிகழ்வில் அஸ்திரதேவா் கோயிலிலிருந்து புறப்பட்டு, கமலாலயக்குளத்துக்கு எழுந்தருளினாா். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அஸ்திரதேவரை சிவாசாரியா்கள் கையில் ஏந்தியபடி, கமலாலய தீா்த்தக் குளத்தில் புனித நீராடி தீா்த்தவாரி நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, விநாயகா், சுப்பிரமணியா், சந்திரசேகரா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் தேரோடிய வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com