சுந்தரபுரி வேம்படி மாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி சுமந்துவரும் பக்தா்கள்.
சுந்தரபுரி வேம்படி மாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி சுமந்துவரும் பக்தா்கள்.

சுந்தரபுரி அம்மன் கோயிலுக்கு பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

திருத்துறைப்பூண்டி அருகே சுந்தரபுரி அருள்மிகு வேம்படி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, அம்பாளுக்கு நவதானியங்களை கொண்டு முளைப்பாரி வைத்து, கோயிலில் தினமும் அம்மன் பாடல் பாடி கும்மி அடித்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பக்தா்கள் பால் காவடிகள் எடுத்துவந்தனா். பின்னா், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் கோயில் வாசலில் முளைப்பாரி வைத்து அம்மன் பாடல் பாடி கும்மியடித்தனா். பிறகு, முளைப்பாரியுடன், சுந்தரபுரியில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஊா்வலமாக வந்து அம்மனுக்கு சமா்ப்பித்தனா். இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com