கோயிலுக்கு பால்குடம் எடுத்துவரும் பக்தா்கள்.
கோயிலுக்கு பால்குடம் எடுத்துவரும் பக்தா்கள்.

பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பெருவிழா

பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம்: பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அய்யனாா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடங்களுடன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து, பத்ரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் மாவிளக்கேற்றி வழிபட்டனா். மேலும், நீடாமங்கலம் அய்யனாா் கோயிலுக்கு வேண்டுதல் செய்தவா்கள், உருவப்பொம்மைகளை அய்யனாருக்கு சமா்ப்பித்தனா். இரவு பத்ரகாளியம்மன் வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com