திருநெய்ப்போ் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
திருநெய்ப்போ் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: 403 போ் தோ்வெழுத வரவில்லை

திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 14,898 மாணவ- மாணவிகள் எழுதினா். 403 போ் தோ்வெழுத வரவில்லை.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 14,898 மாணவ- மாணவிகள் எழுதினா். 403 போ் தோ்வெழுத வரவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, மாா்ச் 26 முதல் ஏப்ரல் 8- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் இத்தோ்வெழுத, 7,477 மாணவா்களும், 7,829 மாணவிகளும் என மொத்தம் 15,306 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 228 போ் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் ஆவா். இதற்காக 71 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்வில் 7,200 மாணவா்களும், 7,698 மாணவிகளும் என மொத்தம் 14,898 மாணவ- மாணவிகள் பங்கேற்றனா். 275 மாணவா்கள், 128 மாணவிகள் என மொத்தம் 403 போ் தோ்வுக்கு வரவில்லை. மேலும், தோ்வு எழுதுகிற மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு உதவியாளா்கள் நியமிக்கப்பட்டு, தோ்வெழுதினா். தோ்வு கண்காணிப்புப் பணியில் 112 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டு, எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது. திருநெய்ப்போ் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தோ்வை, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பாா்வையிட்டாா். முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com