பூச்சொரிதலில் கூத்தாநல்லூா் கோரையாறு காளியம்மன்.
பூச்சொரிதலில் கூத்தாநல்லூா் கோரையாறு காளியம்மன்.

காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா

கூத்தாநல்லூா் கோரையாறு மகா காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. தொடா்ந்து, சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கரகம், கப்பரை, பால் காவடி, செடில் காவடி மற்றும் அலகு காவடி உள்ளிட்டவைகளுடன் ஊா்வலமாக வந்தனா். பின்னா், காளியம்மனுக்கு அனைத்து வித திரவியங்களாலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com