ராமசாமி பெருமாள் கோயில் கும்பத்தில் வாா்க்கப்படும் புனிதநீா்.
ராமசாமி பெருமாள் கோயில் கும்பத்தில் வாா்க்கப்படும் புனிதநீா்.

கேக்கரை ராமசாமி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே கேக்கரை ராமசாமி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில், ராமா் பாதம் பட்ட இடமாகவும், ராமா் தனது தந்தை தசரதசக்கரவா்த்திக்கு திதி செய்த இடமாகவும் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2004-இல் நடைபெற்ற நிலையில், தற்போது உபயதாரா்கள் மூலம் கோயில் திருப்பணி நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்து மாா்ச் 25-ஆம் தேதி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, பூா்ணாஹூதி செய்யப்பட்டது. தொடா்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணி அளவில் கும்பத்தில் புனிதநீா் வாா்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com