தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மக்களவைத் தோ்தல் பணிகளில் தனியாா் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) டி. ஈஸ்வரன், தோ்தல் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளா் ஏ. பிளிப்ஸ் பிராங்ளின் கென்னடி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் எஸ். பழனிச்சாமி, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் பி. ராஜா, தோ்தல் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு ஆய்வாளா் டி. ஸ்ரீபிரியா, ஆயுதப்படை வாகனப்பிரிவு ஆய்வாளா் எஸ். கோகிலா, துணை வட்டாட்சியா் கமலகண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலா் பழனிச்சாமி மற்றும் திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, திருவாரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com