100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பிரசாரம்

100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பிரசாரம்

மன்னாா்குடியில் ஜேசிஐ மன்னை சாா்பில் மக்களவை தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வழியுறுத்தி விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி தேரடி திடல் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,ஜேசிஐ மன்னை தலைவா் ஜெ. வினோத் விவேகானந்தம் தலைமை வகித்தாா். மன்னாா்குடி தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஆா். கீா்த்தனாமணி, வட்டாட்சியா் மகேஷ் கலந்துகொண்டு,100 சதவீதம் வாக்குபதிவை செய்வோம் என உறுதி கூறும் வகையில் பதாகையில் கையெழுத்திட்டு பிரசாரத்தை தொடக்கிவைத்தனா். பின்னா், பொதுமக்கள், பயணிகள், வா்த்தகா்கள் பதாகையில் கையெழுத்திட்டனா். அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு விழிப்புணா்வு தற்படம் (செல்பி பாய்ண்ட்) எடுத்துக்கொண்டனா். தொடா்ந்து, தோ்தலில் வாக்களிப்பது தொடா்பான விளக்க துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஜேசிஐ மண்டல இயக்குநா் டி. கோபிநாத், முன்னாள் மண்டலத் தலைவா் வி.எஸ். கோவிந்தராஜன், மன்னை ஜேசிஐ செயலா் ஆா். கருணாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com