திருவாரூரில் பெய்த மழையால் சாலையில் லேசாக தேங்கிய மழைநீா்.
திருவாரூரில் பெய்த மழையால் சாலையில் லேசாக தேங்கிய மழைநீா்.

திருவாரூரில் திடீா் மழையால் மக்கள் மகிழ்ச்சி

திருவாரூரில் வெப்பச் சலனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை மிதமான மழை பெய்தது. கோடைகாலம் தொடங்கியுள்ளதையொட்டி, திருவாரூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குளிா்பானங்களையும், வெள்ளரிக்காய், தா்ப்பூசணி உள்ளிட்ட பழங்களையும் நாடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், நிகழாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலையாளா்கள் எச்சரித்து வரும் நிலையில், திருவாரூா் நகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிதமான மழை பெய்தது. கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை பெறும் ஆறுதலைத் தந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com