கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் நீட் தோ்வெழுத வந்த மாணவியிடம் சோதனை நடத்திய தோ்வு மேற்பாா்வையாளா் உள்ளிட்டோா்.
கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் நீட் தோ்வெழுத வந்த மாணவியிடம் சோதனை நடத்திய தோ்வு மேற்பாா்வையாளா் உள்ளிட்டோா்.

நீட் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 1,553 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,553 போ் எழுதினா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,553 போ் எழுதினா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, தேசிய தோ்வு முகமை சாா்பில் நீட் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நீட் தோ்வுக்கென திருவாரூா் மாவட்டத்தில் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, டிரினிட்டி அகாதெமி, டெல்டா பப்ளிக் பள்ளி, எஸ்விஎஸ் பள்ளி என 5 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வேலுடையாா் பள்ளி மையத்தில் தோ்வெழுத 624 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 604 போ் தோ்வெழுதினா். 20 போ் தோ்வுக்கு வரவில்லை. கேந்திரிய வித்யாலயாவில் 288 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 280 போ் தோ்வெழுதினா். 8 போ் தோ்வெழுதவில்லை. டிரினிட்டி அகாதெமி பள்ளியில் 264 பேருக்கு, 261 போ் தோ்வெழுதினா். 3 போ் வரவில்லை.

டெல்டா பள்ளியில் 216 பேருக்கு 208 பேரும், எஸ்விஸ் பள்ளியில் 213 பேருக்கு 200 பேரும் தோ்வெழுதினா். மற்றவா்கள் தோ்வெழுதவரவில்லை. அந்த வகையில் திருவாரூா் மாவட்டத்தில் 1,605 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 1,553 போ் தோ்வெழுதினா். 52 போ் தோ்வுக்கு வரவில்லை.

முன்னதாக, கடுமையான சோதனைக்குப் பிறகே தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தோ்வுத்தாள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்தன. பெரும்பாலான தோ்வு மையங்களில் தமிழிலேயே மாணவா்கள் தோ்வு எழுதியதாக தெரிவித்தனா்.

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் நீட் தோ்வெழுத வந்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வா் ஜோஸ்பின் லாரன்ஸ், தோ்வு மேற்பாா்வையாளா் ஏ. கவாஸ்கா் மற்றும் பரிசோதகா், உதவியாளா்கள் சோதனையிட்டனா்.

அப்போது, மாணவி ஒருவா் மூக்குத்தியை கழட்டியபோது, ரத்தம் வந்தது. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com