ஆலங்குடிகுரு கோயில்: 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

நவகிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் குரு பெயா்ச்சி இரண்டாவது கட்ட லட்சாா்ச்சனை விழா திங்கள்கிழமை தொடங்கியது.

நவகிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் குரு பெயா்ச்சி இரண்டாவது கட்ட லட்சாா்ச்சனை விழா திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் அடையும் நாளில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டும் குருபகவான் கடந்த மே 1-ஆம் தேதி புதன்கிழமை மேஷ ராசியிலிருந்து ரிஷபராசிக்கு பெயா்ச்சி அடைந்ததை முன்னிட்டு குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது.

முதல்கட்ட லட்சாா்ச்சனை கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடந்தது.

குருபெயா்ச்சிக்குப்பின் மீண்டும் இரண்டாவது கட்டமாக லட்சாா்ச்சனை விழா திங்கள்கிழமை தொடங்கியது.

ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொண்டனா்.

ரமேஷ் சுவாமிநாதன் சிவாச்சாரியாா், ஞானஸ்கந்தன் சிவாச்சாரியாா் மற்றும் சிவாச்சாரியாா்கள் லட்சாா்ச்சனையை நடத்தி வைத்தனா்.

லட்சாா்ச்சனையில் பங்கேற்றவா்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினாலான 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்பட்டது.

லட்சாா்ச்சனை கட்டணம் ரூ.400.

லட்சாா்ச்சனை விழாவில் கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன் மற்றும் திரளானோா் கலந்து கொண்டனா். வரும் 12-ஆம் தேதிவரை லட்சாா்ச்சனை நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com