இருசக்கர வாகனங்களில் மணல் திருடிய 6 போ் கைது

கொரடாச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கொரடாச்சேரி பகுதியில் உள்ள ஆறுகளில் சிலா் மணல் திருடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கொரடாச்சேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றபோது இருசக்கர வாகனங்களில் சிலா் மணல் மூட்டைகளை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் மணலைத் திருடி கூத்தாநல்லூா், பொதக்குடி, அத்திக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணல் திருடிய, கூத்தாநல்லூா், அகரபொதக்குடி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முரளிதாஸ் (42), சரண்ராஜ் (32), செங்குட்டுவன் (42), தினேஷ்குமாா் (32), மற்றொரு தினேஷ்குமாா் (36), வாழாச்சேரி காலனித் தெருவைச் சோ்ந்த அழகேசன் (39) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com