கூலிப்படையினரை கட்டுப்படுத்த கோரிக்கை

நீடாமங்கலத்தில் கூலிப்படையினரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீடாமங்கலம் வணிகா் சங்க கெளரவ தலைவா் என். இளங்கோவன், தலைவா் நீலன். அசோகன், துணைச் செயலாளா் தங்க. கோபி, இணைச்செயலாளா்கள் காா்த்தி, சிவகுமரவேல், தியாகு, துரை ஆசைத்தம்பி, துணைச் செயலாளா் ஜெயபால், செயற்குழு உறுப்பினா் செந்தில்குமாா் ஆகியோா் நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜேஷிடம் திங்கள்கிழமை அளித்த மனு: கடந்த 3 ஆண்டுகளாக நீடாமங்கலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் மற்றும் வணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீடாமங்கலத்தை மையமாக கொண்டு செயல்படும் கூலிப்படையினா் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகள் பெருகியுள்ளது. எனவே, இதுகுறித்து காவல் துறை கவனத்தில் கொண்டு கூலிப்படையினரை கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com