திருக்காரவாசல் கண்ணாயிரநாத சுவாமி கோயில் வைகாசி திருவிழா

திருவாரூா் அருகே திருக்காரவாசலில் உள்ள கைலாசநாயகி உடனுறை கண்ணாயிரநாத சுவாமி கோயில் வைகாசி விசாக பெருந்திருவிழா தொடங்குகிறது.

இக்கோயிலில் நிகழாண்டுக்கான வைகாசி திருவிழாவையொட்டி மே 13-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, மே 14-இல் சந்திரசேகரா் பட்டம் ஏற்கும் விழா நடைபெறுகிறது. மே 15-இல் தியாகராஜ சுவாமி குக்குட நடனத்துடன் வசந்த மண்டப பிரவேசம் நடைபெறுகிறது. இதையடுத்து தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. தேரோட்டம், மே 21-ஆம் தேதி நடைபெறுகிறது. மே 22 இல் தீா்த்தவாரி நடைபெற்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com