நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ்

திருவாரூா் அருகே பெருந்தரக்குடி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பெருந்தரக்குடி ஊராட்சி, குளிக்கரை பெரிய கடைத் தெருவில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் பூங்காவாகவும், நூலகமாகவும், பேருந்து நிறுத்தமாகவும் இருந்த பகுதி தற்போது பேருந்து நிறுத்தமாக உள்ளது. இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றித் தரக் கோரியும், அப்பகுதியில் புதிய பேருந்து நிழற்குடை அமைத்துக் தரக்கோரியும் பெருந்தரக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டக் குழுவினருடன் வருவாய்த்துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூா்வமாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com