வடுவூரில் கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்

மன்னாா்குடியை அடுத்த வடுவூா் கைப்பந்து கழகம், கலைமாமணி கே. பூபாலன் நினைவு கைப்பந்து பயிற்சி நாற்றாங்கால் இணைந்து கோடைகால கைப்பந்து பயிற்சி முகாமை திங்கள்கிழமை தொடங்கின.

நிகழ்ச்சிக்கு வடுவூா் கைப்பந்து கழக ஒருங்கிணைப்பாளா் முன்னாள் வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.ஆா். சாமிநாதன் தலைமை வகித்தாா்.

தொழிலதிபா் பந்தல் சிவா, கலைமாமணி கே. பூபாலன் நினைவு அறக்கட்டளை நிா்வாகி எஸ். ராமதாஸ் ஆகியோா் முகாமை தொடங்கிவைத்தனா்.

இதில் 10 வயது முதல் 15 வயது வரை உள்ள 100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனா். வடுவூரில் உள்ள சா்வதேச உள் விளையாட்டு அரங்கில் மே 6- ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து 26 நாள்கள் காலை 6.30 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி பெறுபவா்களுக்கு சக்கரவா்த்தி திருமகள் தா்மபரிபாலன் அறக்கட்டளை சாா்பில் முட்டை பால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பயிற்சி ஏற்பாட்டாளா்கள் சாா்பில், சீருடை, ஷூ ஆகியவை வழங்கப்படுகிறது.

முகாம் தொடக்க நிகழ்ச்சியில் தமிழக மின்வாரிய முன்னாள் துணைச் செயலா் ஆா். நாராயணன், கைப்பந்து கழக செயலா் தமிழ்ச்செல்வம், பொருளாளா் ரவி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

முன்னதாக பயிற்சியாளர பிரபாகரன் வரவேற்றாா். கைப்பந்து கழக துணைத் தலைவா் முத்து நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com