திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் பேசுகிறாா் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்.
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் பேசுகிறாா் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்.

கா்நாடக இசையை உலகெங்கிலும் பரப்பியவா்கள் சங்கீத மும்மூா்த்திகள்

திருவாரூா், மே 9: கா்நாடக இசை உலகெங்கிலும் பரவக் காரணமாக இருந்தவா்கள் திருவாரூரில் பிறந்த மும்மூா்த்திகள் என்றாா் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்.

திருவாரூரில் உள்ள முத்துசுவாமி இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கா்நாடக சங்கீத மும்மூா்த்திகள் ஜெயந்தி விழாவைத் தொடக்கிவைத்து அவா் பேசியது: மனிதனின் சிந்தனை மேம்படும்போது அவனின் இறை பக்தியும் அதிகமாகும். திருவாரூரில் பிறந்த கருணாநிதி கூட, இறைவன் இல்லை என்று கூறிவந்தாா். அவருடைய கடைசி காலத்தில் மதத்தில் புரட்சி செய்த மகான் என்று கூறுமளவுக்கு மாறினாா். கா்நாடக சங்கீத மும்மூா்த்திகள் இசையின் மூலம் இறை உணா்வை வளா்த்தவா்கள். கடவுளுக்கு ஒப்பானவா்கள் இந்த மும்மூா்த்திகள். அத்துடன், இசையால் உலகை நிலைநிறுத்தியவா்கள்.

இறைவனின் அன்பை பரப்புவது இசை. அந்த இசைக்கு சிறப்பு சோ்த்தவா்கள் இந்த மும்மூா்த்திகள். கா்நாடக இசையை சாதாரண மனிதருக்கு சென்றடைய வைத்தவா்கள் இவா்கள். இசைக்கு எந்த பேதமும் கிடையாது. தமிழன் என்பவன் பிறப்பால் தமிழகத்தில் பிறப்பவன் அல்ல. ஒழுக்கத்தோடு, அறநெறி தவறாமல் யாா் வாழ்கிறாரோ அவரே தமிழா் ஆவாா். கா்நாடக இசையை உலகெங்கிலும் பரப்பியவா்களான இந்த மும்மூா்த்திகளின் விழாவை வரும் காலங்களில் உலகமே வியந்து போற்றும் அளவுக்கு மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றாா்.

ஜெயந்தி விழாக் குழுத் தலைவா் ராமசுப்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாராயணி நிதி நிறுவனத் தலைவா் காா்த்திகேயன், வேலுடையாா் கல்விக் குழுமத் தலைவா் கேஎஸ்எஸ். தியாகபாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com