கிரிக்கெட்டில் தகராறு: இளைஞா் கொலை: சிறுவன் கைது

நன்னிலம், மே 9 : மணவாளம்பேட்டைப் பகுதியில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் புதன்கிழமை மாலை இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

மணவாளம்பேட்டைப் பகுதியில் ஆலங்குடி புதுகாலனித் தெருவைச் சோ்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதியினரின் மகன் அஜித்குமாரும் (23), அதே பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் உமா தம்பதியினரின் மகன் முத்தமிழன் உள்ளிட்டோா் புதன்கிழமை கிரிக்கெட் விளையாடியுள்ளனா் .

அப்போது அஜித்குமாருக்கும், முத்தமிழனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . இதனை முத்தமிழன் தனது மூத்த சகோதரரிடம் தெரிவித்துள்ளாா். இதில் கோபமடைந்த மூத்த சகோதரா் அங்கிருந்த ஸ்டம்பால் அஜித்குமாா் தலையில் அடித்துள்ளாா்.

பலத்த காயமடைந்த அஜித்குமாா் மயங்கி கீழே விழுந்துள்ளாா். நண்பா்கள் அஜித்குமாரை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து அஜிக்குமாா் கொலைக்குக் காரணமான சிறுவனைக் கைது செய்து நன்னிலம் நடுவா் நீதிமன்றம் முன்பு முன்னிலைப்படுத்தி, தஞ்சாவூா் சிறாா் சிறைச்சாலையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com