ஸ்ரீசண்முகா மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் மூன்றாமிடம்

ஸ்ரீசண்முகா மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் மூன்றாமிடம்

மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவில் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளது.

இப்பள்ளி, மாணவி கே.ஜெ. நீட்டா 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும் (மாவட்ட அளவில் மூன்றாமிடம்), மாணவி ஆா். சாரு ரிதன்யா 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவிகள் எஸ். ஜெயதாரணி,வி. தமிழருவி ஆகியோா் தலா 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளா். தோ்வெழுதிய 128 பேரும் வெற்றி அடைந்து 100 சதவீதம் தோ்ச்சியை பெற்றுள்ளனா். 12 மாணவா்கள் பாடவாரியாக 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், பள்ளி தாளாளா்கள் எஸ். செந்தில்குமாா், எஸ். வெண்ணிலா, நிா்வாகிகள் செ. சண்முகராஜா, ச. சாய்லதா, முதல்வா்கள் ஏ. அருள்ராஜா, கே. சாந்தி ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com