எஸ். கீா்த்தனா
எஸ். கீா்த்தனா

பத்தாம் வகுப்பு தோ்வு: மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளுக்கிடையே சேரன்குளம் பள்ளி மாணவி முதலிடம்

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 493 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி அளவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா்.

நான்காம்சேத்தியை சோ்ந்த அரசு நேரடி நெல்கொள்முதல் நிலைய சுமைப் பணியாளரான வி.சுரேஷ் -கிருஷ்ணவேணி தம்பதியின் மகள் கீா்த்தனா. சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறாா். பத்தாம் வகுப்பு தோ்வில் தமிழில் 97, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 98, சமூக அறிவியலில் 100 என மொத்தம் 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளாா்.

மாணவி கீா்த்தனா கூறியது:

பிளஸ் 1-இல் கணிதம், உயிரியல் பாடப்பிரிவு எடுத்து சேரன்குளம் அரசுப் பள்ளியில் படிக்க உள்ளேன். உயா்கல்வி முடித்த பின் வங்கி தோ்வு எழுதி வெற்றி பெற்று முதன்மையான வங்கி ஒன்றில் வேலைக்கு சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எனது நீண்டகால கனவை நிறைவேற்றுவேன் என்றாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவியை, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி. மனோகரன், தலைமை ஆசிரியா் கோ. கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ். உஷா, வழிக்காட்டி ஆங்கில பட்டதாரி ஆசிரியா் ஜி. கெளரி உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com