இருதய நோய் பரிசோதனை, பொது மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தில் இலவச இருதய நோய் கண்டறிதல் மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தில் இலவச இருதய நோய் கண்டறிதல் மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ ஏ.கே. சுப்பையா 28-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாம் சித்தமல்லி ஏகேஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திமுக மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ். காா்த்திக், கோட்டூா் ஒன்றியச் செயலாளா் தேவதாஸ் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா்.

இதில், 400-க்கும் மேற்பட்டவா்களுக்கு இருதய நோய் பரிசோதனை செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு இசிஜி மற்றும் எக்கோ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இம்முகாமில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கலைவாணி மோகன், மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் சரண்யா பாலு, கோட்டூா் ஒன்றியச் செயலாளா் பால ஞானவேல், ஊராட்சித் தலைவா்கள் இனிய சேகரன், சிவசங்கரி, வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com