கோயிலுக்கு பால் குடம், காவடி எடுத்து வரும் பக்தா்கள்.
கோயிலுக்கு பால் குடம், காவடி எடுத்து வரும் பக்தா்கள்.

சேந்தனாங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவிழா

5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சித்திரைத் திருவிழாவையொட்டி, பால்குடம் மற்றும் அலகு காவடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகேயுள்ள சேந்தனாங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சித்திரைத் திருவிழாவையொட்டி, பால்குடம் மற்றும் அலகு காவடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கோயில் புனரமைப்புப் பணிகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.

சில மாதங்களுக்கு முன் திருப்பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, நிகழாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காவடி ஊா்வலம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழமணலி விநாயகா் கோயிலிலிருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலம், முக்கிய வீதிகள் வழியாக சேந்தனாங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. இந்த ஊா்வலத்தில் அலகு காவடி, பால் காவடி, செடில் காவடி, மயில் காவடி எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வித்தனா்.

இதில் சேந்தனாங்குடி, கீழமணலி, வடகரை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, மலா் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com