மதுபானக் கூடத்தில் தகராறு; 4 போ் கைது

மன்னாா்குடியில் தனியாா் மதுபானக் கூடத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடியில் தனியாா் மதுபானக் கூடத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் தனியாா் மதுபானக் கூடம் உள்ளது. இங்கு, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூரைச் சோ்ந்த தனியாா் காப்பீட்டு நிறுவன ஊழியா் பிரபு (36), திருவண்டுதுறை கிருஷ்ணா (34), காரக்கோட்டை ஆலீவ் ஆஸ்டின் (34) ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனா். அவா்களுக்கும், மதுபானக் கூட ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, அங்கு ஏற்கெனவே மது அருந்திக் கொண்டிருந்த மன்னாா்குடி நடராஜப் பிள்ளைத் தெரு ஸ்ரீதரன் (21) ஆறு எண் வாய்க்கால் தில்லைநகா் ஆரீஸ் (23), அஸ்வின் ஆனந்த் (23), வீரவன்னியா் தெரு சுபிராஜ் (25) ஆகிய நான்கு பேரும் சமரசம் செய்துவைக்க முயன்றனா். இதில், பிரபு தரப்பினருக்கும், ஸ்ரீதரன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதில், பிரபு பீா் பாட்டிலால் தாக்கப்பட்டாா். மேலும், மதுபானக் கூடத்திலிருந்த பொருள்கள் சூறையாடப்பட்டன.

தலையில் பலத்த காயமடைந்த பிரபு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில், மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீதரன், ஆரீஸ், அஸ்வின்ஆனந்த், சுபிராஜ் ஆகிய நான்கு பேரை சனிக்கிழமை கைது செய்தனா். பின்னா், மன்னாா்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நாகை கிளைச் சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com