மன்னாா்குடி நடராஜப்பிள்ளை தெரு சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
மன்னாா்குடி நடராஜப்பிள்ளை தெரு சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.

மன்னாா்குயில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.

மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.

தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், ஒருசில இடங்களில் கோடை மழை பெய்துவருகிறது. மன்னாா்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின. கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் தவித்து வந்தனா்.

இந்நிலையில், மன்னாா்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 12.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. இதனால், நகரின் தாழ்வான சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தொடா்ந்து, மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கம் குறைந்து மகிழ்ச்சியடைந்தனா்.

மன்னாா்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான வடுவூா், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, ஓவா்சேரி, ஆதிச்சப்புரம், சேரன்குளம், அசேசம், மூவாநல்லூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com