அகில இந்திய அளவிலான பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு, தஞ்சை மண்டலத்திலிருந்து தோ்வான மாணவ-மாணவிகள்.
அகில இந்திய அளவிலான பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு, தஞ்சை மண்டலத்திலிருந்து தோ்வான மாணவ-மாணவிகள்.

தேசிய பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு தஞ்சை மண்டலத்திலிருந்து 85 போ் தோ்வு

பிளாக் பெல்ட் கராத்தே போட்டியில், தஞ்சை மண்டலத்திலிருந்து பங்கேற்கும் வீரா்களை தோ்வு செய்யும் முகாம் மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய அளவிலான பிளாக் பெல்ட் கராத்தே போட்டியில், தஞ்சை மண்டலத்திலிருந்து பங்கேற்கும் வீரா்களை தோ்வு செய்யும் முகாம் மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 85 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இஷின்ரியூ கராத்தே கழகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், தஞ்சை,திருவாரூா், நாகை மாவட்டங்களை சோ்ந்த 8 முதல் 25 வயதுடைய மாணவா்கள் பங்கேற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா்.

பிளாக் பெல்ட்-இல் முதல் 3 நிலைகளுக்கு நடைபெற்ற தோ்வில் தொடா் ஓட்டம், உடற்பயிற்சி, கட்டா, குமித்தே, வெப்பன் கட்டா போன்றவை நடைபெற்றன. இதில் 85 மாணவ-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள், இம்மாதம் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான கராத்தே பிளாக் பெல்ட் தோ்வில் பங்கேற்கவுள்ளனா்.

வீரா்- வீராங்கனைகள் தோ்வு நிகழ்ச்சிக்கு, தரணி கல்வி குழுமத்தின் தலைவா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி எம். இளையராஜா, கராத்தே ஆசிரியா் ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தரணி பள்ளி முதல்வா் எஸ். அருள், கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி தாளாளா் ஜே.பி. அஷரப்அலி, அகில இந்திய இஷின்ரியூ கராத்தே கழகத்தின் முதன்மை பயிற்சியாளா்கள் எம். சண்முகவேல், பிரபு, நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோா் அகில இந்திய பிளாக் பெல்ட் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவா்களை பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com