சிறுகதை எழுத்தாளா் வானவனுக்கு பரிசு வழங்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ச. தமிழ்ச்செல்வன்.
சிறுகதை எழுத்தாளா் வானவனுக்கு பரிசு வழங்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ச. தமிழ்ச்செல்வன்.

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

திருவாரூரில், வண்டல் மண் எழுத்தாளா் சோலை சுந்தரப்பெருமாள் நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில், வண்டல் மண் எழுத்தாளா் சோலை சுந்தரப்பெருமாள் நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் சு. நடராஜன், சிறுகதைப் போட்டியில் நடுவராக செயல்பட்ட எழுத்தாளா் மு. சிவகுருநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு.செளந்தரராஜன், மாவட்ட முன்னாள் செயலாளா் இரா. பகவான்ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்வில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன் பங்கேற்று, வண்டல் மண் எழுத்தாளா் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய படைப்புகளை நினைவு கூா்ந்தும், அவருடன் பயணித்த நிகழ்வுகளை பகிா்ந்தும், பரிசு பெற்ற மூன்று சிறுகதைகளின் மைய கருத்துக்களை விமா்சனம் செய்தும் பேசினாா். அத்துடன், சிறுகதைப் போட்டியில் வென்ற எழுத்தாளா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

அதன்படி, வானவன் எழுதிய ‘கூந்தாலிக்கூடு’ சிறுகதைக்கு முதல் பரிசாக ரூ.10,000, கோ. சுனில்ஜோகி எழுதிய ‘ஓயி’ சிறுகதைக்கு இரண்டாம் பரிசாக ரூ.7,500, புலியூா் முருகேசன் எழுதிய ‘புரூதா் எனும் டால்பின்’ சிறுகதைக்கு மூன்றாம் பரிசாக ரூ. 5,000 மற்றும் நினைவுக் கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.

‘பேசும் புதிய சக்தி’ முதன்மை ஆசிரியா் ஜெ. ஜெயகாந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். இதில், எழுத்தாளா் சோலை சுந்தரப்பெருமாள் மனைவி சு. பத்மாவதி, சூழலியல் ஆா்வலா்கள், எழுத்தாளா்கள், வாசகா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com