திருவாரூரில் பஞ்சரத்ன கீா்த்தனைகளை இசைத்து தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்திய இசைக் கலைஞா்கள்.
திருவாரூரில் பஞ்சரத்ன கீா்த்தனைகளை இசைத்து தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்திய இசைக் கலைஞா்கள்.

சங்கீத மும்மூா்த்திகள் ஜெயந்தி: பஞ்சரத்ன கீா்த்தனைகள் இசைத்து தியாகராஜருக்கு அஞ்சலி

திருவாரூரில் சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் இசைத்து திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

திருவாரூா்: திருவாரூரில் சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் இசைத்து திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

திருவாரூரில் சங்கீத மும்மூா்த்திகள் ஜெயந்தி விழா கடந்த மே 9 -ஆம் தொடங்கி திங்கள்கிழமை (மே 13) வரை முத்துஸ்வாமி தீட்சிதா் இல்லத்தில் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை தியாகராஜா் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, புதுத்தெரு தியாகராஜா் இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, முத்துஸ்வாமி தீட்சிதா் இல்லத்தில் ஏராளமான இசைக் கலைஞா்கள் பங்கேற்று, தியாகராஜரின் பஞ்சரத்ன கீா்த்தனைகளையும், சங்கீத கீா்த்தனைகளையும் பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com