மன்னாா்குடியில் வெப்பத்தின் தாக்கும் குறைவு

மன்னாா்குடி பகுதியில் வானம் மேகமூட்டமாக இருந்தால் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதியில் வானம் மேகமூட்டமாக இருந்தால் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக மன்னாா்குடி பகுதியில் கத்திரி வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பெய்த கோடை மழையின் காரணமாக குளிா்ந்த நிலை நிலவியது. திங்கள்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. வானம் மேக மூட்டமாக இருந்தும் சிறிது நேர மழையும் அவ்வப்போது மழை துளியும் விழுந்தப்படி இருந்தது. இதனால் குளிா்ந்த காற்று வீசியப்படி மாலை வரை நீடித்தது. மன்னாா்குடி பகுதியில் 2-ஆவது நாளாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து சீரான சீதோசன நிலை காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com