ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

திருவாரூா் நகராட்சியில், ஊதியம் வழங்காததுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் பேச்சுவாா்த்தை காரணமாக போராட்டத்தை கைவிட்டனா்.

திருவாரூா் நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 50 போ், ஒப்பந்த அடிப்படையில் 120 போ் என தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பல போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், கடந்த ஆண்டு திருவாரூா் வட்டாட்சியா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், எந்த மாதமும் அந்த தேதிக்குள் சம்பளம் கொடுக்கவில்லையாம்.

இதனிடையே, ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இவா்களுக்கு ஆதரவு தெரிவித்து நிரந்தர தூய்மைப் பணியாளா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஊழியா் சங்கத் தலைவா் ஆா். ராஜேந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, நகராட்சி அலுவலா்களுடன் நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com