பிளஸ் 1 பொதுத் தோ்வு: திருவாரூா் மாவட்டம் 87.15 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவில் திருவாரூா் மாவட்டம் 87.15 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 6,231 மாணவா்கள், 7,181 மாணவிகள் என மொத்தம் 13,412 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். இதில், 5,040 மாணவா்கள், 6,649 மாணவிகள் என மொத்தம் 11,689 போ் தோ்ச்சி பெற்றனா். அந்தவகையில், 80.89 சதவீத மாணவா்களும், 92.59 சதவீத மாணவிகளும் என மொத்தம் 87.15 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு 86.51 சதவீதம் தோ்ச்சி அடைந்த நிலையில், நிகழாண்டில் 0.65 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநில அளவில் கடந்த ஆண்டு 30-ஆவது இடத்தில் இருந்த திருவாரூா் மாவட்டம், நிகழாண்டில் 32-ஆவது இடத்துக்கு குறைந்துள்ளது.

24 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி: திருவாரூா் மாவட்டத்தில் 7 அரசுப் பள்ளிகள் உள்பட 24 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. அபிஷேகக் கட்டளை அரசு (ஆதிதிராவிடா்) மேல்நிலைப் பள்ளி, கருவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி, புத்தகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருமக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, கோவிந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூா் அரசு மாடல் பள்ளி ஆகிய அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. மேலும், 14 தனியாா் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com