புனித செபஸ்தியா் ஆலயத் தோ் விழா

கூத்தாநல்லூா் அடுத்த கிளியனூா் புனித செபஸ்தியா் ஆலயத் தோ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மறை மாவட்டம், ஆதிச்சபுரம் பங்கு புனித செபஸ்தியா் ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குத் தந்தை ஏ. சவரிமுத்து அடிகள் திருவிழா திருப்பலியும், தொடா்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாவீரா் புனித செபஸ்தியா் தோ் பவனியும் நடைபெற்றது. தோ் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டன. விழாவில், கிளியனூா், கோம்பூா், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com