மே 22-இல் நாட்டுப் படகுகள் ஆய்வு

திருவாருா் மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகள் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப் படகுகளும் மே 22-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்படும். ஆய்வு நாளில் படகு உரிமையாளா்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடா்புக் கருவிகள் ஆகியவைகளை தயாா் நிலையில் வைத்திருப்பதுடன், ஆய்வுக் குழுவுக்கு அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். மேலும், அனைத்து நாட்டுப் படகுகளும் மீன்வளத்துறை தெரிவித்துள்ள வண்ணம் பூசி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ஆய்வுக்குட்படுத்தாத படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி, அப்படகுகளின் பதிவு சான்றை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com