வைகாசி மாத பிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் வைகாசி மாத பிறப்பு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சீதா, லெட்சுமணா், அனுமன் சமேத சந்தான ராமருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல, நீடாமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் வைகாசி மாத பிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com