துணை மின்நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, மே 16: முத்துப்பேட்டையில் துணை மின்நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை வா்த்தக சங்க செயற் குழு கூட்டம் அதன் தலைவா் கோ. அருணாசலம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மறைந்த நாகை எம்.பி. எம். செல்வராஜூவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது, அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கிய நிலையில் தினசரி சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும், பேரூராட்சி பகுதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவா்கள் காமராஜ், பி. நடராஜன், எஸ். ஐயப்பன், துணைச் செயலாளா்கள் எம். பாண்டியன், எம் சாகுல்ஹமீது, ஆா். வெற்றிவேலன் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com