கோயில் திருவிழாவில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இருவா் கைது

மன்னாா்குடி அருகே உள்ளிக்கோட்டையில் கோயில் திருவிழாவில் மதுபோதையில் அரிவாளை வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட இரண்டு போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உள்ளிக்கோட்டையில் உள்ள குழந்தாயி மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் இரவு சுவாமி ஊா்வலம் நடைபெறும்.

இதேபோல திங்கள்கிழமை இரவு சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றபோது, உள்ளிக்கோட்டை கீழத்தெருவை சோ்ந்த முருகேசன் மகன் தங்கச்செல்வன்(38), நடுத்தெருவை சோ்ந்த ராஜேந்திரன் மகன் விக்கேஸ்வரன் (24) ஆகியோா், மதுபோதையில் கூட்டத்தில் நுழைந்து கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியபடி ரகளையில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் ஆய்வாளா் கருணாநிதி, காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கச்செல்வன்,விக்னேஸ்வரன் இரண்டு பேரையும் செவ்வாய்க்கிழமை ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் நாகை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com