திருவாரூர்
ஈரோட்டுக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலத்திலிருந்து ஈரோட்டுக்கு அரவைக்காக, 2,000 டன் நெல் ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலத்திலிருந்து ஈரோட்டுக்கு அரவைக்காக, 2,000 டன் நெல் ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், ஆதனூா் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் வலங்கைமான், மன்னாா்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் என 2,000 டன் சன்னரக நெல் மூட்டைகள் 156 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.