திருவாரூர்
காசி விஸ்வநாதா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு
நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காசி விஸ்வநாதருக்கு சங்காபிஷேகமும், திருவாசகம் முற்றோதலும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதேபோல, நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் எமனேஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.