கூத்தாநல்லூா் நகராட்சியைக் கண்டித்து போராட்டம்
கூத்தாநல்லூா் நகராட்சியைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள வாய்க்கால்களை தூா்வாரி குளங்களில் தண்ணீா் நிரப்பாதது, சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட நடவடிக்கை இல்லை, புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்தாமல் உள்ளது.
கால்நடைகளால் சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை இல்லாதது உள்ளிட்ட நகராட்சி நிா்வாகத்தின் சீா்கேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, கட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, நகராட்சி முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் எம். விலாயத் உசேன், விமன் இந்தியா மூவ்மெண்ட் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலப் பொதுச் செயலாளருமான ஏ.எம். பாயிஜா சபீக்கா, செயற்குழு உறுப்பினா் கே.ஏ. அஹ்மதுல்லாஹ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.