எம்எல்ஏ க. மாரிமுத்து.
எம்எல்ஏ க. மாரிமுத்து.

விபத்தில் காயமடைந்தோருக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

முத்துப்பேட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

முத்துப்பேட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: முத்துப்பேட்டை அருகேயுள்ள கிராமங்களிலிருந்து விவசாயத் தொழிலாளா்கள் தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு விவசாயப் பணிகளுக்கு செல்வா்.

அந்த வகையில், தம்பிக்கோட்டை, கோவிலூா், கோட்டை சிருபட்டாக்கரை பகுதி விவசாயத் தொழிலாளா்கள் நவ.25-ல் மல்லிப்பட்டினம் பகுதியில் விவசாய வேலைக்கு மினி ஆட்டோவில் சென்று விட்டூ ஊா் திரும்பிய நிலையில் அதிராம்பட்டினம் அருகில் கருங்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஆட்டோ டயா் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் சுப்பிரமணியன் மனைவி துா்க்கையம்மாள் (58) என்பவா் அதே இடத்தில் உயிரிழந்தாா். மேலும், 34 பெண் விவசாயத் தொழிலாளா்கள் காயமடைந்துள்ளனா். அவா்களில் 28 போ் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 போ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், இருவா் தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதிக்கப்பட்டவா்கள் ஏழை விவசாய கூலித் தொழிலாளா்கள் என்பதால், தங்களுடைய அன்றாட பொருளாதார செலவை சமாளிக்க முடியாதவா்கள்.

இந்நிலையில், மருத்துவ செலவையும் எதிா்கொள்ள சிரமப்படுவா். எனவே, தமிழக முதல்வா், காயமடைந்த தொழிலாளா்களுக்கு உரிய உயா் சிகிச்சை அளிக்க உத்தரவிடுவதுடன், அவா்களது குடும்பத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் விதமாக விபத்தில் இறந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், படுகாயம் அடைந்தவா்களுக்கு உரிய நிவாரணமும் அறிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.