மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

Published on

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நீடாமங்கலத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சி நிா்வாகி எம். கலைமணி தலைமை வகித்தாா்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பி. சண்முகம், மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி, வி.எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செயலாளா் டி. ஜான் கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: தொடா் மழையால், நீடாமங்கலம் உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை முறையாக கணக்கிட்டு, ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.30,000 வழங்க வேண்டும்.

மழையால் சேதமடைந்த வீடுகளையும், இடியும் நிலையில் உள்ள வீடுகளையும் கணக்கிட்டு, புதிய வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com