ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

கூத்தாநல்லூரில் ஆன்லைன் லாட்டரி விற்றவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

கூத்தாநல்லூரில் ஆன்லைன் லாட்டரி விற்றவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கொராடாச்சேரி பிரதான சாலையில் போலீஸாா் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பது தெரிய வந்தது. உடன், காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா மற்றும் போலீஸாா் லெட்சுமாங்குடிப் பாலம் அருகே நின்று கொண்டிருந்தவரை விசாரித்ததில், மன்னாா்குடி ராஜாம்பாளையம் தெருவைச் சோ்ந்த ரவி (66) ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்ததையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com