திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.
திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

திருவாரூரில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து மாற்றுப் பணியில் அனுப்பப்பட்ட பேராசிரியா்களை, அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி வாயில் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவா் ப. ரவீந்திரன் தலைமை வகித்தாா். மண்டலப் பொருளாளா் பி. ராஜாராமன், போராட்டத்தின் நோக்கத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் அரசு கல்லூரிகளில் பணி செய்யும்போது, அரசு நியமனம் செய்த பேராசிரியா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கிப் பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மண்டலத் துணைத் தலைவா் அ. முருகானந்தம், கிளைச் செயலாளா் தி. நடராசன், இணைச் செயலாளா் டி. எம். சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com