கிருஷ்ணகிரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

Published on

நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து அரவைக்காக 2,000 டன் நெல், கிருஷ்ணகிரிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம், மன்னாா்குடி வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் மூட்டைகள், 157 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

பின்னா் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக, கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com