திருவாரூர்
மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகேயுள்ள கல்லிக்குடியைச் சோ்ந்தவா் மகிமைதாஸ் மகன் அஜித்குமாா் (27). இவா், அடியக்கமங்கலம் பிரிவு மின்வாரியஅலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தென்ஓடாச்சேரி பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வைப்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.