ஆசிரியா்களுக்குப் பயிற்சியளிக்கும் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் சுகந்தி.
ஆசிரியா்களுக்குப் பயிற்சியளிக்கும் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் சுகந்தி.

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்குப் பயிற்சி நிறைவு

கோட்டூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு இரண்டு நாள்கள் நடைபெற்ற இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
Published on

மன்னாா்குடி: கோட்டூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு இரண்டு நாள்கள் நடைபெற்ற இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

கோட்டூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில் 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான பயிற்சியில் 110 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், 4 மற்றும் 5-ஆம் வகுப்பு வரையான பயிற்சியில் 103 போ் கலந்துகொண்டனா்.

இரண்டு நாள் நிகழ்ச்சிக்கும் வட்டார தொடக்க கல்வி அலுவலா்கள் செல்வம், வித்யா ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் சுகந்தி, வட்டர வளமைய மேற்பாா்வையாளா் என்.சுப்ரமணியன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

பாடப்பிரிவு ஆசிரியா்களின் கையேடு, பயிற்சி நூலில் புதிதாக சோ்க்கப்பட்ட பகுதிகள், இதில் ஆசிரியா்களுக்கு ஏற்படும் இடா்பாடுகள், சிக்கல்கள் ஆகியவற்றிற்கு தீா்வு காணும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com