பாரம்பரிய நெல் விதை விற்பனைக்கு சான்று பெற வலியுறுத்தல்
பாரம்பரிய நெல் விதைகளை, உண்மை நிலை சான்று பெற்று, விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாரம்பரிய நெல் கழகத்தின் தலைவா் வி. ரகுநாதன் தெரிவித்திருப்பது:
தமிழகத்தில் பாரம்பரிய நெல் விவசாயத்தின் மீதான ஆா்வம் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி, பாரம்பரிய இயற்கை விவசாயிகள் இல்லாத வியாபாரிகள் சிலரும், சில அங்காடிகளும் பாரம்பரிய நெல் விதை விற்பனையைத் தொடங்கியுள்ளனா்.
இவா்கள் வியாபார நோக்கில், விதைக்கலப்பு, விதை இனக்கலப்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனால், பாரம்பரிய நெல் விதைகளின் தூய்மைத்தன்மை பாதிக்கப்பட்டு, முற்றிலுமாக சீரழித்து விடும் அபாயம் உள்ளது.
இதைத் தவிா்க்க, பாரம்பரிய நெல் விதை உற்பத்தி செய்யும் இயற்கை விவசாயிகள், அரசாங்கத்தின் விதைச்சான்றளிப்பு துறையிடம் பதிவு செய்து, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும். பின்னா், இதற்கான உண்மை நிலை விதைகள் என சான்றிதழ் பெற்று முறையாக விற்பனை செய்ய வேண்டும். இந்த சான்று பெறுவதற்கு அரசாங்க பதிவுக் கட்டணம் ரூ. 80 மட்டுமே எனத் தெரிவித்துள்ளாா்.