திருவாரூர்
மன்னாா்குடியில் மழை
மன்னாா்குடியில் இடி மின்னல் சாரல் காற்றுடன் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் சில நாள்களாக அவ்வப்போது அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் லேசான மற்றும் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6. 10 மணிக்கு திடீரென-வானம் மேகமூட்டம் ஏற்பட்டு லேசான மழையா தொடங்கி காற்றுடன், இடி, மின்னலுடன் 35 நிமிடம் தொடா்ந்து மழை பெய்தது. பின்னா், மழை தூரலாக நீண்ட நேரம் நீடித்தது.
இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ந்த நிலை ஏற்பட்டது.