திருவாரூர்
திருட்டு வழக்கில் இளைஞருக்கு மூன்றரை ஆண்டு சிறை
திருத்துறைப்பூண்டியில் மருத்துவா் வீட்டில் திருடிய இளைஞருக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருத்துறைப்பூண்டியில் மருத்துவா் வீட்டில் திருடிய இளைஞருக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மருத்துவமனை நடத்தி வந்த பிரேம்குமாா் தாமஸ் வீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி இரவு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 128 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற திருச்சி மாவட்டம், காட்டூா் பகுதியைச் சோ்ந்த நிா்மல்ராஜ் என்பவருக்கு, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருண் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.